2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்துக்கு எதிராக அம்பாறையில் ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எஸ்.மாறன்)


முஹம்மது நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தாலும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

அக்கரைப்பற்றினை தளமாகக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு இந்த ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேற்படி ஹர்த்தாலையொட்டி இப்பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

குறித்த திரைப்படத்துக்கு எதிராக அக்கரைப்பற்று பட்டணப்பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணியானது அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, அக்கரைப்பற்றிலிருந்து ஆரம்பமாகி, அட்டாளைச்சேனை ஊடாக பாலமுனை வரை சென்று திரும்பியது.

இந்த ஆர்பாட்டத்தின் போது, திரைப்படத்தினைத் தயாரித்தவருக்கு எதிராகவும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிங்டன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பகல் 12.00 மணியளவில் நிறைவடைந்தது.





  Comments - 0

  • முஹம்மட் இன்ஹாம் Tuesday, 18 September 2012 07:47 AM

    ஏன் நம்மூா்ல (ஓட்டமாவடி) யில மட்டும் இதைப்பற்றி யாரும் அலட்டிக்கிற இல்ல யாருக்கும் சமூக சிந்தனை இல்லாமல் போயிட்டோ தெரியாது.

    Reply : 0       0

    NALEER Tuesday, 18 September 2012 10:54 AM

    நமது உறவுக்காரர்களுக்காக அயராது பாடுபடும் நம் சகோதரர்களுக்கு நன்றிகள்.

    Reply : 0       0

    Faiz Tuesday, 18 September 2012 11:45 AM

    நமது உறவுக்காரர்களுக்காக அயராது பாடுபடும் நம் சகோதரர்களுக்கு நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X