2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவதூறாக சித்திரிக்கும் அமெரிக்க படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார், அப்துல் அஸீஸ்)


முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவதூறாக சித்திரிக்கும் விதத்தில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பொதுநல அமைப்புக்களின் ஒன்றியம் இந்த ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மேற்படி ஹர்த்தாலையொட்டி இப்பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணியானது அம்பாறை – கல்முனை பிரதான வீதி வழியாக, ஹிஜ்ரா சந்தி பள்ளிவாசல்வரை சென்றது.

'அமெரிக்காவே மதங்களை தூசிக்காதே', 'இஸ்லாமியரை அவமதிக்காதே', 'முஸ்லிம்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதாதே' போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X