2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கொலைக் குற்றச்சாட்டில் கைதான மூவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்றில் கடந்த மாதம் ரொட்டி போடச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் தென்னந்தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவ்விளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதான மூன்று சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பதூர் நகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி றியாஸ் (20 வயது) இளைஞர் கடந்த மாதம் 9ஆம்; திகதி வீட்டில் இருந்து கடைக்கு ரொட்டிபோடச் சென்ற நிலையில் அடுத்த நாள் அக்கரைப்பற்று 9ஆம் பிரிவு மன்னங்குளம், சோமர் தென்னந்தோட்டத்தில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று ரகசிய பொலிஸாரின் விசாரணையையடுத்து கொலையுடன் தொடர்புடைய அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் ஆட்டோ ஒன்றும் கைப்பற்றப்பட்டு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X