2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஆழ்கடலில் மீனிபிடிக்க சென்றவரை காணவில்லை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          (எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை துறையிலிருந்து நேற்று இரவு ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்ற சாய்ந்தமருதைச் சேரந்த மீனவர் ஒருவர் கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய எம்.ஐ.லத்தீப் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தனது நண்பர்கள் மூவருடன் ஆழ்கடலில் இயந்திர படகு மூலம் மீன்பிடி நடவடிக்கைக்காக பயணித்து கொண்டிருக்கும் போது கடலில் ஏற்பட்ட காற்று மற்றும் பலத்த அலை காரணமாக இவர் படகிலிருந்து கடலில் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவரது சடலத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை துறையைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.

இலங்கையின் எந்தப் பகுதியிலாவது இவரது சடலத்தை கண்டவர்கள் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் முஹம்மட் நஸீரின் தொலைபேசி ( 0772355430) இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டகப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X