2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சுருக்கு மகத்தான வரவேற்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாண சுகாதார, அமைச்சராக பதவியேற்றுள்ள எம்.ஐ.எம்.மன்சுர், தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் செய்தபோது பொது மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், கிழக்கு மாகாணத்திற்கான சுகாதார, சுதேச வைத்திய, கூட்டுறவு, சமூக சேவைகள், தொழில்நுட்பக்கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியை மாகாண அமைச்சர் மன்சுர் வந்தடைந்த போது அங்கு ஒன்று திரண்ட மக்கள் வீதியோரம் இருமருங்கிலும் இருந்து வரவேற்றனர்.

சம்மாந்துறை வங்களாவடிச் சந்தியிலிருந்து சம்மாந்துறை நகர் ஊடாக அமைச்சரின் வீடு வரை ஊர்வலமாக அழைத்தச் செல்லப்பட்டதுடன், வீதியோரங்களில் திரண்டிருந்த மக்கள் அமைச்சரை வரவேற்றனர்.

இதில் பெருந்திரளான ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய அமைச்சர்,

'எனக்கு இப்பதவியை வழங்க சிபாரிசு செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்தப் பதவியின் மூலம் எனது தகுதிக்கும், திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற உச்ச அளவில் கிழக்கு மாகாண மூவின மக்களுக்கும் சமனான முறையில் பேதமின்றி பணிபுரிவேன். அதற்காக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை கோரவுள்ளேன்' என்று கூறினார்.





  Comments - 0

  • bishrullah Wednesday, 26 September 2012 07:31 AM

    சம்மாந்துறை மக்களின் மகிழ்ச்சி எமக்கு மன நிறைவைத் தருகிறது!

    Reply : 0       0

    Amjath ULM Wednesday, 26 September 2012 08:49 AM

    மூத்த போராளி எம்.ஐ.எம். மன்சூருக்கும் சம்மாந்துறை மண்ணுக்கும் நீண்ட நாட்களின் பின்பு அமைச்சுப்பதவி
    தந்த மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எமது
    இதய பூர்வமான நன்றிகள்..

    Reply : 0       0

    M.C.Najeeb Thursday, 27 September 2012 01:07 PM

    சம்மாந்துறைக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தந்த தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு நன்றி

    Reply : 0       0

    M.C.MUFA Friday, 28 September 2012 05:13 PM

    சம்மாந்துறை மண்ணினை கௌரவப்படுத்திய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மனமார்ந்த நன்றிகள்...

    Reply : 0       0

    mohamed Saturday, 29 September 2012 07:10 AM

    வாழ்க தலைவ‌ா...

    Reply : 0       0

    avathani Sunday, 30 September 2012 05:52 AM

    2008ல் மாகாண சபைக்கு செல்லாதவர் ஏன் 2012ல் செல்கிறார், சமூக சிந்தனையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X