2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கடவுச்சீட்டு மோசடிக் குற்றச்சாட்டில் பெண் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

தனது கடவுச்சீட்டில் வயதைக் குறைத்தும் பெயரை மாற்றியும் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை நாளை செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி உத்தரவிட்டார்.

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கடவுச்சீட்டில் வயதைக் குறைத்து பெயரை மாற்றியதுடன், போலி முகவரியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இப்பெண் வெளிநாடு செல்வதற்காக தனது பிறந்த ஆண்டான 1961ஆம் ஆண்டை 1970ஆம் ஆண்டில் பிறந்தவரென்றும் வேறொரு பெயரை மாற்றியும் போலி முகவரியை வழங்கியும் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாடு சென்று  ஜுலை மாதம் நாடு திரும்பியதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று திரும்பும் பெண்களுக்கு வழங்கப்படும் 150,000 ரூபா பணத்தை தனது முகவரிடமிருந்து பெற்றுத்தருமாறு கூறி இவர் நேற்றையதினம் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து, இவரது கடவுசீட்டையும் தேசிய அடையாள அட்டையையும் ஒப்பிட்டு பார்த்தபோது இவர் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளதாகவும் சவளக்கடை பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X