2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் சமுர்த்தி வங்கிக் கட்டிடம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின்; மூலம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு சமுர்த்தி வங்கி மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  அட்டாளைச்சேனை  பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதயாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் தி அல்விஸ் கலந்துகொண்டார். அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல்.எம்.சலீம், றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X