2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசத்துக்கு மகுடம் - 2013 எனும் தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையில் - பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

குறிப்பாக, காணிப் பிரச்சினைகள், பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களிலுள்ள பிரச்சினைகள், ஆகியவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு, உத்தேச வயது அத்தாட்சிப் பத்திரம் பெறுதல், காலம் கடந்த திருமணப் பதிவு செய்து கொள்ளல், தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்தல், ஓய்வூதியப் பிரச்சினை, நெல் சந்தைப் படுத்துதல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், காட்டு யானை தாக்குதலுக்கு தீர்வு காணுதல் அங்கவீனர்களுக்கும், வலுவிழந்தோருக்கும் சக்கர நாற்காலி மற்றும் ஊன்று கோல் வழங்குதல் ஆகிய சேவைகளும் இதன் போது வழங்கப்பட்டன.

ஏராளமான திணைக்களங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்குபற்றிய இந் நடமாடும் சேவையில் - பொதுமக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X