2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வீட்டின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்ட மண்டை ஓடு மீட்பு

Super User   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச வீடு ஒன்றின் முற்றத்தில் புதைத்துவைக்கப்பட்ட மண்டை ஓட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று பொலிஸார் மீட்டதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

ஆலையடிவேம்பு கோபால் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் புதைத்துவைக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்றை வீட்டின் உரிமையாளர்  முற்றத்தை துப்பரவு செய்யும் போது முற்றத்தில் மண்டை ஓடு இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இதணையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளதுடன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த மண்டை ஓட்டை அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியிலுள்ள இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றின் தலையை தண்டித்து அதன் மண்டை ஓட்டை எடுத்து வந்து புதைத்துவைக்கப்பட்ட வீட்டில் உள்ள பெண் ஒருவரை வசியப்படுத்துவதற்காக செய்வினை செய்து புதைத்துவைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூன்று பேரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X