2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நேற்று கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜின் முயற்சியுடன் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் வைத்தியர்களான எம்.ரீ.என்.சிபாய, எச்.ஏ.என்.பிரியாகெலும் மற்றும் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.தங்கவேல் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X