2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு' ஆய்வரங்கு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவினையொட்டி, 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இதழியல் வரலாறு' எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்கொன்று - அக்கரைப்பற்று ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா - 2012 தொடர்பான கலந்துரையாடலொன்று அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மேற்கண்ட தகவலினைத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபள்யு.யு. வெலிகல, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.ஜே. அம்ஜத், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்டட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது மேற்படி தமிழ் இலக்கிய விழாவினை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X