2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பு விவசாயிகளின் விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்,  லூதர்சன் வேள்ட் றலீப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 17 விவசாயச் சங்கங்களுக்கு 30 இலட்சம் ரூபா செலவில் விவசாய உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பொத்துவில், ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, நாவிதன்வெளி, உகண ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 17 விவசாயச் சங்கங்களுக்கு 5 அரிசி குற்றும் மில், 17 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், 6 கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள்,  34 நெல் அவிக்கும் பாத்திரங்கள், 22 கிருமிநாசினி தெளிகருவிகள் ஆகியன வழங்கப்பட்டன.

விவசாய உத்தியோகத்தர் எஸ்.சுப்பிரமணியம்  தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமைக்காரியாலய மண்டபத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் டி.ஜே.எம்.அசங்க அபேயவர்த்தன, சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.செந்தூர்ராசா, மாவட்ட விதைநெல் அத்தாட்சி அதிகாரி எம்.நசீர், ஆகியார் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X