2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட எரிபொருள் நிலையம் சேதமடைந்து வருவதாக மக்கள் கவலை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதி மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவனமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்று இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோணாவத்தைப் பகுதி மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை வழங்குவதற்கு வசதியாக பல லட்சம் ரூபா செலவில் மேற்படி எரிபொருள் விநியோக நிலையத்தினை சர்வதேச தொண்டு நிறுவனமொன்று சில வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்துக் கொடுத்தது.

ஆயினும், இந்த எரிபொருள் விநியோக நிலையமானது அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை பயன்படுத்தப்படாமல் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றது. இதனால், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் சேமிக்கும் தாங்கி போன்றவை சேதமடைந்து வருகின்றன.

இதேவேளை, குறித்த எரிபொருன் விநியோக நிலையமானது மீனவ சங்கமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்த நிலையில், குறித்த எரிபொருள் விநியோக நிலையத்தினை சீராக இயக்கி மீனவர்களுக்கான எரிபொருளினை வழங்கக் கூடிய பொது நிறுவனமொன்றிடம் இந் நிலையத்தினைக் கையளிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




  Comments - 0

  • kiyas Friday, 12 October 2012 09:25 AM

    இந்த ஊரைப் பொறுத்தவரய் ஒரு மாகாண சபை உறுப்பினர். ஒரு மாகாண அமைச்சர் என்று இருவர் உள்ளனர். இவர்களால் இதை இயங்க வைக்க முடியாதா? இதில் அவர்களுக்கு லாபம் இல்லை. அதனால்தான் இந்த மாதிரி இருக்கிறார்கள். நீங்கள் மக்களால் தெரிவானவர்கள். மக்களுக்கு சேவை செய்வதுதான் உங்கள் கடமை. சும்மா பொறுப்பு இல்லாமல் இருக்காமல் இந்த எரிபொருள் விநியோக நிலையத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்... இது உங்கள் பொறுப்பு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X