2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள  அஜித் ரோஹண நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றார்

மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றி பிரேமலால் ரணகல, கிழக்கு மாகாண சபை தேர்தலில் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உயர் நீதிமன்றில் வழக்குகளை தொடர்ந்ததுடன் உடன் இடம்மாற்றுமாறு அரசாங்கத்திடமும் தேர்தல் ஆணையாளரிடமு; பல கோரிக்கைகள் முன்வைத்திருந்தது.

இந்நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவை ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டார். இந்த வெற்றிடத்திற்கு பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X