2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, தம்பிலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

தம்பிலுவில் வீ.சி.வீதியைச் சேர்ந்த கணேசப்பிள்ளை கோணேசமூர்த்தி (வயது 36)  என்பவரே விபத்தில் பலியானவராவார்.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் திடீரெனக் கீழே வீழ்ந்ததாகவும் இதன்போது பின்னால் வந்துகொண்டிருந்த  முச்சக்கரவண்டி இவர் மீது மோதியதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மதுபோதையில் நடந்து வந்துகொண்டிருந்தபோதே இவர் திடீரென கீழே வீழ்ந்துள்ளாரென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  முச்சக்கரவண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X