2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு சரத் வீரசேகர எம்.பி. தளபாடங்கள் கையளிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு - அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து  ஒரு தொகுதி தளபாடங்களை இன்று புதன்கிழமை கையளித்தார்.

அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இந்த தளபாடங்களை பாடசாலையின் அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அறபா வித்தியாலயத்தின் வளப்பற்றாக்குறைகள் குறித்து - தான் அறிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல உதவிகளை இப்பாடசாலைக்குச் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகர கூறினார்.

கடந்த வருடமும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் அறபா வித்தியாலயத்துக்கு ஒரு தொகை தளபாடங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர், டப்ள்யூ. டி. வீரசிங்க, கேர்ணல் திலகரட்ண, மெத்தா சமாஜ அமைப்பின் அட்டாளைச்சேனை பிரதேச ஆலோசகர் சட்டத்தரணி எம்.ஏ.சி. கசுறுத்தீன், அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் மௌலவி, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X