2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பாடசாலைக்கு சென்ற யானைகள்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர், காட்டு யானைகள் பாடசாலைக்கு சென்றிருந்தமையினால் அந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட சம்பவமொன்று அம்பாறையில் இன்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, திஸ்ஸபுர வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அந்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அம்பாறை நகரிலிருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிய சுமார் 19 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது.

அங்கு இன்று கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பாடசாலைக்குள், சுமார் நான்கைந்து காட்டு யானைகள் நுழைந்திருப்பதைக் கண்டு அச்சமடைந்து போன வழியிலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டன.

இதனைக் கேள்வியுற்ற பாடசாலை நிர்வாகம், பாடசாலையை தற்காலிகமாக மூடிவிட்டது. சுப்ல மணிநேரங்கள் பாடசாலைக்குள் இருந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X