2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தேயட்டகிருள்ள (தேசத்துக்கு மகுடம்) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் ஜனாதிபதி செயலகம் உட்பட மத்திய மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், அதிகாரசபைகள் அடங்கலாக 40இற்கு மேற்பட்ட கரும பீடங்கள் செயற்பட்டன.
இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனத்துறை, கிராமிய மின்சார, வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.பாஸித், உதவி தவிசாளர் ஏ.எம்.தாஜூதீன், அம்பாறை மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் சுதர்சன குணசேன, இலங்கை தரைப்படையின் பொத்துவி பிரதேசத்துக்கான கேர்ணல் கீர்த்தி குணசோம உட்பட திணைக்களத் தலைவர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சர்வ மதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பொது பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் 292 காணி அனுமதிப் பத்திரங்கள், 1000 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள்,  02 சக்கர நாற்காலிகள், 04 குடும்பங்களுக்கு சமுர்த்தி வீட்டு லொத்தர் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு சேவைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X