2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை நகர லயன்ஸ் கழக நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ - 2 மாவட்ட கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் சாதனையாளர்கள் கௌரவிப்பும் பிராந்திய தலைவருக்கான வரவேற்பும் புதிய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணமும் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எஸ்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 306 சீ மாவட்ட ஆளுநரின் விசேட இணைப்பாளரும் பிராந்திய தலைவருமான லயன் கலாநிதி ஏ.செல்வேந்திரன் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக 306 சீ மாவட்ட ஆளுநரின் விசேட இணைப்பாளரும் திட்ட இணைப்பாளருமான லயன் எஸ்.சசேந்திரன், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லயன் எஸ்.தைரியராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் உறுப்பினராகவிருந்து மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட லயன் ஏ.எல்.எம்.நஸீர் நினைவுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  புலமைப் பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த லயன் அங்கத்தவாரின் புதல்வி செல்வி மஹேசன் பிருதுவி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விழாவின் பிரதம அதிதி லயன் கலாநிதி ஏ.செல்வேந்திரன், கல்முனை நகர லயன்ஸ் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்ததுடன், புதிய உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாணத்தையும் செய்துவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X