2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சமுர்த்தி உதான விற்பனைக் கண்காட்சி

Super User   / 2012 ஒக்டோபர் 21 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, ஹனீக் அஹமட்)

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் அனுசரனையுடன் 2012ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி விற்பனைக் கண்காட்சி 'திவி நெகுமைக்கு சமுர்த்தி சக்தி' எனும் தொணிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உதான விற்பனைக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த விற்பனைக் கண்காட்சி நிகழ்வின்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்துகொண்டார்.

இந்த கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச கைத்தொழில் முயற்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்களின் காட்சியும், விற்பனையும் இடம்பெறவுள்ளதுடன் பல்வேறு கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X