2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரட்சிக்குப் பின்னர் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரட்சிக்குப் பின்பு தற்போது பருவமழை ஆரம்பித்ததை தொடர்ந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தின் 68,399 ஹெக்டயர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.வரட்சியினால் கடந்த சிறுபோக நெற்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்கம் இலவசமாக விதைநெல் வழங்கவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.

இந்த போகத்தில் வயல் நிலங்களுக்கு செயற்கையான உரங்களை பாவிப்பதற்கு பதிலாக இயற்கை உரங்களைப் பாவிப்பதற்கு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளும் செயல்முறைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X