2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, ஹனீக் அஹமட்))


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 10 இலட்சம் மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட பயிர் விதைகளை மக்களுக்கு வழங்கும் வைபவம் நாடாளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை 9.59 மணிக்கு கிழக்கு  திசையை நோக்கி நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதான நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, கூட்டுறவு, சமூக சேவைகள,தகவல் தொழில் நுட்பம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் திவிநெகும திட்டப் பயனாளிகளுக்கான விதைகள் அதிதிகளால வழங்கி வைக்கப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, விதைகளை வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலும்   இடம்பெற்றன. பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டு விதைகளை வழங்கி வைத்தார்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X