2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் குறைபாடுகளை நிவர்த்திக்க கோரிக்கை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலையில் பல்வேறு வகையான பௌதீக மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிலவுகின்றமையினால், நோயாளர்கள் பாரிய சிக்கல்களையும், அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 வருடங்கள் பழமையான இந்த வைத்தியசாலையில் தண்ணீரைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைகள் நிலவுகின்றதாகக் கூறப்படுகிறது. இதனால், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் தமது அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்தியர், மற்றொரு கிராம வைத்தியசாலையிலும் கடமையாற்றி வருகின்றார். இதனால், துறைநீலாவனை அரசினர் வைத்தியசாலைக்கு வாரத்தில் 03 நாட்கள் மட்டுமே குறித்த வைத்தியர் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் - ஏனைய நாட்களில் வரும் நோயாளர்கள் வைத்தியர் இன்மையால் சிகிச்சைகளுக்காக தூர இடங்களுக்கு செல்ல வேண்டியேற்படுகின்றது.

மேலும், இந்த வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறும் ஆண் - பெண் நோயாளர்கள் ஒரே மண்டபத்தினுள் தங்க வைக்கப்படுகின்றதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி அமையப் பெற்றுள்ளபோதும் அதற்கான முழு வசதிகள் செய்து கொடுப்படவில்லை என்றும், குறிப்பாக, அதற்குரிய தாதியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, துறைநீலாவணை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளைச் சீர்செய்து மக்களுக்கு முறையான சேவைகளை வழங்குமாறு இந்தப் பகுதி மக்கள் உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X