2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சீரற்ற காலநிலையால் அம்பாறை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்,அப்துல் அஸீஸ்)


நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மீனவர்கள்  இன்று செவ்வாய்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதுடன்,  கடல் கொந்தளிப்பாகவுள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் சூறாவளி ஏற்படலாமென்று முன்னறிவித்தல் விடுக்கப்பட்டயமையால் இம்மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துவருகின்றனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளை பாதுகாக்கும் பொருட்டு ஒலுவில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X