2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சமூக பொலிஸ் சேவை சம்பந்தமான பயிற்சிப்பட்டறை

Super User   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சமூக பொலிஸ் சேவை சம்பந்தமான  பயிற்சிப்பட்டறை  இன்று புதன்கிழமை அம்பாறையில் நடைபெற்றது.

கொப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ.ஏ.ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டடையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜீத் ரோஹன, ஆசியா மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தீபலால் கமகே, கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 15 பொலிஸ் நிலையங்களிலுள்ள 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட இப்பயிற்சிப் பட்டறையில் சிவில் பாதுகாப்புக் குழுக்களோடு இணைந்து குற்றங்களை பொலிஸார் எவ்வாறு தடுக்கலாம் என விளக்கமளிக்கப்பட்டதுடன் ஓர் பொலிஸ் நிலையத்திற்கு 3 வீதம் 45 துவிச்சக்கர வண்டிகள் கெப்சோ நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X