2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பயிலுநர் பட்டதாரி உதவி திட்டமிடல் பணிப்பாளரால் தாக்கப்பட்டதாக புகார்

Super User   / 2012 நவம்பர் 01 , பி.ப. 05:15 - 1     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் - பயிலுநர் பட்டதாரியாக கடமையாற்றும் கே.எம். முஹைதீன் என்பவர் - பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவரால் தாக்கப்பட்டப்பட்டதாகத் தெரிவித்து பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் சிசிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை நேற்று புதன்கிழமை பிற்பகல் பிரதேச செயலக வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள முல்லைத்தீவு பகுதிக்குச் சென்ற உதவித் திட்டமிடல் அதிகாரி, அங்கு வைத்து தன்னை சரமாரியாகத் தாக்கியதாக மேற்படி பயிலுநர் பட்டாதாரி முஹைதீன் தெரிவித்தார்.

தன்னை ஏற்றிச் சென்ற வாகனத்தில் அதன் சாரதி சபீக் என்பவரும் மற்றொரு பயிற்சிப் பயிலுநரும் உதவித் திட்டமிடல் பணிப்பாளருடன் வந்ததாகவும், தாக்குதல் நடந்த போது குறித்த இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆயினும், குறிப்பிட் பட்டதாரிப் பயிலுநரை - தான் தாக்கியதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் கூறினார்.

இது தொடர்பில் உதவித் திட்டப் பணிப்பாளர் மேலும் கூறுகையில்ளூ

'சம்வம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேற்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து விடுமுறை பெற்றுச் சென்றுவிட்டேன். இதேவேளை, மேற்குறிப்பட்ட பட்டதாரி பயிலுநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்திலிருந்து – அவருடைய கடமை நேரம் முடியும் வரை அலுவலகத்திலேயே இருந்துள்ளார்.

அதற்குப் பிறகு தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தாக்குதலுக்குள்ளாகி இருந்தால், பிரதேச செயலாளரிடம் ஏன் முறையிடவில்லை. பொலிஸ் நிலையத்துக்கு ஏன் உடனடியாகச் செல்லவில்லை. இதிலிருந்தே இது ஒரு நாடகம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - அவருடைய அலுவலகத் தொலைபேசியிலிருந்து, எனது கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, உடனடியாகச் தன்னைச் சந்திக்குமாறு அழைத்தார்' என்று தாக்குதலுக்குள்ளானதாகதக் கூறப்படும் பட்டதாரி பயிலுநர் கூறுகின்றார்.

'இதனையடுத்தே நான் அவரைச் சந்திக்கத் சென்றேன். அப்போதுதான் அவர் என்னை வாகனத்தில் கூட்டிச் சென்றார். உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் - அவருடைய அலுவலகத் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைத்தமைக்கான விபரங்கள் என்னுடைய கைத்தொலைபேசியில் இன்னும் உள்ளன' என்றும் சம்பந்தப்பட்ட பட்டதாரிப் பயிலுநர் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.    

                                                                                                                                                        

  Comments - 1

  • aboodad Friday, 02 November 2012 02:51 AM

    இவரை பார்த்தா நல்லவர் மாதரியா இருக்கார்.. இவருக்கு பயிலுனர் எல்லாரும் சேர்ந்து சாத்தினா பிரச்சின தீரும். பொலிஸ் முறையில் சாத்த வேண்டும். காயம் வெளிய தெரியப்போடா. பிறகு இவர் திருந்துவார்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X