2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனையில் கரையோரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


சமுத்திரவியல் சட்டத்தையும் பாதுகாப்பையும் அமுல்படுத்துவது தொடர்பான கரையோரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இலங்கை கரையோர காவல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இப்பயிற்சிப்பட்டறையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் பாடசாலை மாணவர்களும்; கலந்துகொண்டனர்.

இதன்போது கரையோர இடப் பரப்புகள், இலங்கை கடலோர வலயங்கள், ஆழ்கடல் மற்றும் கரையோரப் பிரதேசங்களில்  சட்டத்தையும் நீதியையும் சமாதானத்தையும் பாதுகாத்து மீனவர்களினதும் மாலுமிகளினதும் மற்றும்; சகல சமுத்திரவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இப்பயிற்பட்டறையில் இலங்கை கரையோர காவல் திணைக்களத்தைச் சேர்ந்த லெப்டினன் கொமாண்டர் வை.டி.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு பங்குபற்றுநர்களுக்கு விளக்கமளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X