2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வீதி அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 06 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி தொடர்பாக அப்பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, ஜெய்கா திட்ட ஆலோசனைப் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி வீதி, பள்ளி ஒழுங்கை, நகர மண்டப வீதிகளை புனரமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் வேண்டுகோளையடுத்து கல்முனை  பிரதேசத்தில் சேதமடைந்துள்ள வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தனது அமைச்சினூடாக 4 கோடியே 60 இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார்.

கல்முனைப் பிரதேசத்தின் பல வீதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாதளவுக்கு மிக மோசமாக சேதடைந்துள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பின் அவசியம் குறித்து மாகாண அமைச்சர் உதுமாலெவ்வையிடம் விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இனங்க இந்த நிதியினை தனது அமைச்சினூடாக அமைச்சர் உதுமாலெவ்வை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • sam Tuesday, 06 November 2012 07:49 AM

    நிந்தவூரிலிருந்து போட்டியிட்டு, வாக்கு கேட்டவர்கள் இன்று சேவை என்று வரும்போது சொந்த ஊருக்கு போய் நின்று பொல்லடிக்கும் நியாயம் தான் என்னவோ!!! திருமணம் செய்த ஊர் தானே என்று நினைதாரோ?, அல்லது அங்கே எல்லாம் சரியாகத்தான் இருக்கு என்று நினைத்தாரோ! அல்லது பணத்தால் தானே வென்றோம் என்று ஆறுதல் கொண்டாரோ! அல்லது அடுத்த தேர்தலுக்கு விஸ்தரிக்கும் ஆயத்தம் தான் கொண்டாரோ!!! என்னதான்....

    Reply : 0       0

    kalam Saturday, 17 November 2012 05:14 PM

    சாம்............ ஆரிப் சம்சுடீன் பிறந்தது கல்முனை என்பதை மறந்து விடாதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X