2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டும்'

Super User   / 2012 நவம்பர் 06 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாவெல்வை தெரிவித்தார்.

அண்மையில் அநுராதபுரம் மல்வத்தை வீதீயிலுள்ள தக்கியா பள்ளிவாசல் மற்றும் திருகோணமலை பாலையூற்று லூர்த் அன்னை ஆலயத்தின் மாதா சொருபம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு சுதந்திரத் தேசம். இத்தேசத்தில் வாழுகின்ற ஒவ்வொரு இனத்தினரும் தாம் விரும்புகின்ற மதத்தினையும் அதன் சமய விழுமியங்களையும் பின்பற்றி நடப்பதற்கு உரிமையுடையவர்கள். இலங்கை அரசியல் சாசனத்தில் மதச் சுதந்திரம் பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத்தலங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய ஈனச் செயல்களை அனுமதிக்க முடியாது. இத்தாக்குதல்கள் சமூகங்களுக்கிடையேயான  ஒற்றுமையை சீர்குலைக்குமொரு நாககார நடவடிக்கையாகும்.

இன உணர்வுகளைத் தூண்டி இனங்களுக்கிடையே இன விரிசலையும் சந்தேகக் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி, அவற்றினூடாக சுய இலாபம் தேட ஒரு கூட்டம் திரைமறைவிலிருந்து  செயற்படுவதாகவே இத்தாக்குதல் நடவடிக்கைகளைக் கருத வேண்டியுள்ளது. இத்தாக்குதல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்ததொன்றாகும்.

நாசகார சத்திகள் மேற்கொள்ளும் இத்தகைய வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்திற்கான கருப்பொருளாக அமைந்துவிடுகிறது. 

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்லின் பிரச்சார நடவடிக்கையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெற்கில் இடம்பெறும் பள்ளிவாசல்களின் உடைப்புச் சம்பவங்களை கருப்பொருளாக வைத்தே தமது பிரச்சார நடவடிக்கைகளi முன்னெடுத்து 7 ஆசனங்களையும் பெற்று வாக்களித்த மக்களின் அபிலாஷைகளுக்கு மாறு செய்துவிட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொணடுள்ளது. 

இத்தகைய அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்குக் கருப்பொருளாக பயன்படுத்தப்படும் வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாப்பளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ளது.

வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத்தளங்கள் உடைக்கப்படுவதும் பின்னர் அவற்றைப் புனரமைக்க அமைச்சர்களினால் நிதி ஓதுக்கப்படுவதும் என்ற மோசமான கலாசாரம் உருவாகுவதை நிறுத்தி அவை தாக்குதல்களுக்கு உட்படாமல் பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.

நாட்டில் நிரந்தர சமாதானமும்; சுபீட்சமும் ஏற்பட வேண்டும். அவற்றை ஏற்படுத்த வேண்டும் எனச் சிந்தித்து அதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனித நேயமுள்ளவர்களின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். இத்தகைய நாசகார நடவடிக்கைககள் இந்நாட்டில் ஆரோக்கியமற்றதொரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும்.

இதனால், சர்வதேச மட்டத்தில் இலங்கை மேலும் அவப்பெயரைச் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படக்கூடும். அதுமாத்திரமின்றி ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கையும் அடைவிதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். இத்தகைய சம்பவங்களினால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கருத்திற்கொண்டு சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத்தளங்கள் தாக்குதல்களுக்கு உட்படாமல் பாதுகாப்பதுடன் இந்நாசகார சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பாரபட்சம் காட்டபட கூடாது.

இவர்கள் உடனடியாகக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன் இந்நடவடிக்கையானது சிறுபான்மை சமூகங்களிடையே நிலவும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் நீக்கி நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும்" என்றார்.

  Comments - 0

  • ibnu aboo Tuesday, 06 November 2012 06:04 PM

    சபாஷ் இப்படிதான் இருக்கவெண்டும் அரசியல்வாதி என்றால். அமைச்சர் உதுமாலெப்பை தன் பதவியை விடவும் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் பண்புடையவர். அநீதியை தட்டிக்கேட்பதில் அவர் ஒருபோதும் பின் நின்றதில்லை. இவர் ஒருவர்தான் இப்படி துணிச்சலாக அறிக்கை விட்டுள்ளார். அசலான மக்கள் பிரதிநிதி அசத்தலான சேவையாளர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X