2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


திருக்கோவில் கல்வி வலயப் பிரிவில் உள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் 08 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மஹிந்தோதயா ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அந்தப் பாடசாலையின் அதிபர் எஸ்.ரவிந்தீரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ்  பாடசாலையின் பார்த்திருப்போர் மண்டபத்தை நவீனப்படுத்துவதற்காக நாடாளுமன்ற  உறுப்பினர் பி.எச்.பியசேனவினால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .