2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

எம்.பி., மாகாண சபை உறுப்பினர்களிற்கு அழைப்பில்லை

Super User   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கோ மாகாண சபை உறுப்பினர்களிற்கோ அழைப்புவிடுக்கப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

எனினும் அழைப்பின்மை காரணமாக அக்கட்சியின் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.

எனினும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் தலைவருடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த கூட்டத்தில் பங்குபற்றாமை தொடர்பில் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஷ கேள்வி எழுப்பியுள்ளர்.

எனினும் இன்றைய கூட்டத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கவில்லை என பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் பதிலளித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸிற்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்புவிடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் நேற்றை கூட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்மையினால் கலந்துகொள்ளவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி:

சிராஸ் இராஜினாமா செய்வார்: ஹக்கீம் நம்பிக்கை

  Comments - 0

  • x Friday, 25 October 2013 06:54 PM

    athu nadakkathu

    Reply : 0       0

    x Friday, 25 October 2013 06:55 PM

    nadakkathu thampi nadakkathu

    Reply : 0       0

    VALLARASU.COM Saturday, 26 October 2013 04:15 AM

    தம்பி... அதவனிடம் கேளுங்கோ நீ பாதி நன் பாதி என்ற அந்த முதல் அமைச்சர் ஒப்பந்தம் என்னாச்சு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .