2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  கல்வி நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்கு பின்னர் மீண்டும்  இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

கல்லூரியின் பிரதி அதிபர் மீது கல்முனை வலய திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் மேற்கொண்டார். இதனால் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  மாணவர்கள் கல்வி நடவடிக்கையினை பகிஷ்கரிப்பு மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று கல்லூரியில் சுமுகமான நிலைமை ஏற்பட்டு பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்ட போதிலும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை மேற்கொண்டனர்.

இதேவேளை, கல்முனை கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர்  பி.எம்.எம்.பதுர்த்தின் மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.சலீம் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணித்தார்.

பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது -  மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் நேற்று பாடசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டனர்.

அவர்கள் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இப்பிரச்சினைகள் தொடர்பாக  உரியவர்களுடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்ததுடன் பாடசாலையை வருகின்ற மாணவா்களிற்கு கற்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்தே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி நடடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட தொடர்புபட்ட உதவி அதிபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார். எனினும் குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்  வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி கடமைகளுக்கான கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இவர்கள் இருவரும்  எதிர்வரும் 06ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த ஸாஹிரா கல்லூரியில் கற்பிக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் சகோதர்கள் இரண்டு இருவரும் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்பமிடுவதற்கு கல்முனை வலய கல்வி அலுவலகம் அனுமதித்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .