2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளரை இடமாற்ற அமைச்சரவை தீர்மானம்

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் இடமாற்றப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதனால் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை தற்காலிகமாக இணைப்பதற்கும் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்க மாகாண அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் விடுதியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானங்களை மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை பதவியிலிருந்து உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூரினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த அமைச்சரவை வலயக் கல்விப் பணிப்பாளரின் சேவையை உடனடியாக நிறுத்துதல் தொடர்பாக அமைச்சரவை வாரியத்தினால் தீர்மானத்தை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என தீர்மானித்தது.

அத்துடன்  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவின் அறிக்கை மற்றும் சிபாரிசின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளவோம்.அதுவரை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரை தற்காலிகமாக கிழக்க மாகாண கல்வித் திணைக்களத்தில் இணைப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் தீர்மானித்துள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X