Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராக்குடிவில் பகுதியில் உள்ள சிறிய நீரோடைக்குள் இருந்து 48 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமொன்று சனிக்கிழமை (09) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்
பசறையைச் சேர்ந்த இவர், முந்தல் - அங்குனவில் பகுதியில் உள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வந்த வேளையில் நேற்றுமுன்தினம் (08) தனது சம்பளத்தை பெற்றுக் கொண்டு தாராக்குடிவில் உள்ள சிறிய நீரோடைக்குள் அருகில் அவரும் மற்றொருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே பசறைப் பகுதியைச் சேர்ந்த நபர் நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிவானின் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவருடன் இணைந்து மது அறிந்தியதாக கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும், புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
52 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago