2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வெள்ளி விழாவில் சுகாதார அமைச்சர் பங்கேற்பு

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வெள்ளி விழா நிகழ்வில் கலந்துகொள்வதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X