2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மேயர் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை: சாய்ந்தமருது மத்திய குழு செயலாளர்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவினால் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என அக்குழுவின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.ஜலால்தீன் தெரிவித்தார்.

கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்களுக்கும் அக்கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு ஆதரவு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயராக தொடர்ந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எம்.பிர்தௌஸ் தலைமையிலான மத்திய குழு உறுப்பினர்கள் சில கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் பொதுச் செயலாளர் ஏ.ஜலால்தீனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவினால் எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஒரு வருட காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இவ்வாறு கூட்டங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில், எவ்வாறு கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேறப்படும். கட்சி தலைவர் ஹக்கீமிடம் பிர்தௌஸினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அவரின் தனிப்பட்ட கோரிக்கையே தவிர மத்திய குழுவின் கோரிக்கையல்ல.

கட்சி தலைமையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தொடர்ந்து ஆதரவு வழங்கும். தனிநபர்களின் அபிலாஷைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு ஒருபோதும் துணைபோகாது" என்றார்.

  Comments - 0

  • VALLARASU.COM Monday, 04 November 2013 03:25 PM

    உலகத்திலே ஓர் அதிசயமான கட்சி என்றால் அது ஒங்கட மகா கட்சிதான்யா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .