2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சாய்ந்தமருது மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சாய்ந்தமருது பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டதுடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் எரிபொருள் மானியம் வழங்காமல் விடுபட்ட 15 மீனவர்களுக்கும் மானியம் முத்திரை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளின் போது மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மீனவர்களின் நலன்கள், பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள பிரதிப் பணிப்பாளர் கே.செல்வராஜா, மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்களான எம்.சுலைமான், எம்.ஏ.நஸீர், கரையோர பாதுகாப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர், கல்முனை மாநகர பொறியியலாளர் எம்.கே.ஜௌசி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நஸார்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்;.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .