2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூ.இன் இணைப்புக் காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணைப்புக் காரியாலய திறப்பு விழாவும், மாளிகைக்காடு மேற்கு தபாலக வீதி அபிவிருத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும்
நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதியமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழில், தொழில் உறவுகள் பிரதியமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.சீ. வீரசிங்க, காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்கள் சந்திப்பும் இடம்பெற்றதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வும் காணப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .