2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேர்தல் பிற்போடப்பட்டிருந்தால் ரவூப், றிசாத் ஆகியோர் அரசாங்கத்தில் அனைத்தையும் அனுபவித்திருப்பார்கள

Kogilavani   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


 'ஜனாதிபதித் தேர்தல் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடப்பட்டிருப்பின் முன்னாள் அமைச்சர்களான றவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் அரசாங்கத்தில் அனைத்தையும் அனுபவித்திருந்திருப்பார்கள்' என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

'ஆனால், இன்று ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகிகொண்டிருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் அவர்களது வழமையான செயற்பாட்டை மேற்கொண்டனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் புதன் கிழமை(31) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஹலால் பிரச்சினையை பூதாகரமாக்கி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை மிகமோசமாக திட்டித்தீர்த்தவர்தான் பொது எதிரணியிலுள்ள சம்பிக ரணவக்க.

இவர்கள் ஆதரவளித்த கட்சி எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலும் வெற்றி பெற்றதில்லை. தற்போது மூன்றாவது முறையாக மைத்திரியை தோற்கடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
2008 ஆண்டுக்கு பிறகு இப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பது ஜனாதிபதியின் காலத்திலேயே ஆகும்.  

முன்னாள் ஜனாதிபதியினால் ஒரு காபட் வீதி அமைக்க முடிந்ததா, புரையோடிக்கிடந்த 30 வருட யுத்ததத்துக்கு  முடிவுகட்ட முடிந்ததா? ஒன்றும் நடக்கவில்லை.

அரச தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்க இன்று இளைஞர்கள் 10 இலட்சம் பேருக்கு தொழில் வழங்கக் கூறுவது விநோதமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவின்றி இருமுறைகள் வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெறுவார்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X