2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சத்தியபிரமாணம்

Kogilavani   / 2015 ஜனவரி 02 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைவாக புதிய வருடத்தின் முதல்நாள் இடம் பெறுகின்ற உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம்  நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் வியாழக்கிழமை(01) நடைபெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் நாட்டில் உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வும் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றதுடன் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X