2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொத்துவில் வைத்தியசாலை சத்திரசிகிச்சை மூலம் பிறந்த முதலாவது குழந்தை

Kogilavani   / 2015 ஜனவரி 02 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்எம்.ஹனீபா


பொத்துவில் ஆதார வைத்தியசாலையின், வரலாற்றல் முதன்முதலாக அறுவைச் சிகிச்சை மூலம்(01), வியாழக்கிழமை ஆண் குழந்தை கிடைத்துள்ளதாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸதீன் தெரிவித்தார்.

கோமாரி – 01 பிரிவைச் சேர்ந்த பிரதீஸ்வரன் செல்வராணி என்ற கர்ப்பிணிக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் எல்.ஆர்.ஏ.விஜயசூரிய, தலைமையிலான வைத்தியர் குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சமீபத்தில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X