2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக மாறவேண்டும் : அதாஉல்லா

Sudharshini   / 2015 ஜனவரி 04 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக மாற வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து சனிக்கிழமை (03) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகைலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று சில இனவாத அரசியல் தலைவர்கள் மக்களை பிழையான வழியில் கொண்டு செல்வதற்கு முனைகின்றார்கள். அவற்றை உணர்ந்த மக்கள், தேசிய காங்கிரஸினுடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க முன் வந்துள்ளார்கள்.

இக்கால கட்டத்தில் இளைஞர்கள் நன்கு சிந்தித்து தமது வாக்கை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பிற இன சகோதர்களுடன் கைகோர்த்து செயற்பட நேர்மையான அரசியல் பாதையை மர்ஹூம் அஷ்ரப் எங்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கு சிறந்த அரசியல் பாதையை வழிகாட்டி வருகின்றது.

இன்று சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் பாதையை காட்ட முடியாமல் தடுமாறி சுய நலத்துக்காக செயற்படுவதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஜனாதிபதியாக வருவதுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இம்மாநாட்டில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இளைஞர்கள், பொது மக்கள் உட்பட பலர்   கலந்து கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X