2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறையில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றது

Kogilavani   / 2015 ஜனவரி 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.ஹனீபா
, க.சரவணன்

அம்பாறை மாவட்டத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றதாக மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

வாக்களர்கள் நேரத்துடன் சென்று ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு  நிலையங்களில கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

65-70 வீதம்மான வாக்களிப்பு இடம்பெற்றாக வாக்குச்சாவடிகளுக்கு தலைமை தாங்கிய சிரேஷ்ட உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
'அக்கரைப்பற்று வாக்குச் சாவடிகளுக்குள் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை' அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 464 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X