2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

எம்..ஐ.உதுமாலெப்பை காலமானார்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.உதுமாலெப்பை தனது 80ஆவது வயதில்  வெள்ளிக்கிமை (09) அதிகாலை காலமானார்.

சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், அக்கரைப்பற்றிலுள்ள அவரது இல்லத்திலேயே காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில்  இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்றையதினம் (09) ஜும்ஆ தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று பதுர் நகர் மையவாடியில்  இடம்பெறவுள்ளதாக  உறவினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X