2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இனியபாரதியை பிரதேசத்தைவிட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 ஜனவரி 10 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) வீட்டை வெள்ளிக்கிழமை(09) முற்றுகையிட்ட பிரதேச மக்கள் அவரை பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக  அமைத்துள்ள அவரது விட்டை முற்றுகையிட்டு, சுமார்  இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலைமை மோசமடைய பொலிஸாரும் இரானுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்  தலைமையில் பொது மக்களுக்கும் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கிடையில் சமரச பேச்சுக்கள் இடம்பெற்றது.

நிலைமை சுமூகமான பின்னர் இராணுவத்தின் உதவியுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார்(இனியபாரதி) அவரது தம்பிலுவில் இல்லத்தில் இருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X