2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'மைத்திரி யுக நல்லாட்சிக்கான ஆரம்பம்'

Thipaan   / 2015 ஜனவரி 11 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனீபா


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியையொட்டி, 'மைத்திரி யுக நல்லாட்சிக்கான ஆரம்பம்' எனும் தொனிப்பொருளில், மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வு, சின்னப்பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைக் குழுவின் ஏற்பாட்டில் கிளைக் குழுவின் தலைவரும் சனசமூக நிலையத்தின் தலைவருமான பி.எம். பசீர் தலைமையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் சின்னப்பாலமுனை கிளைக் குழுவின் செயலாளர் ஏ.எம். பைசால் உட்பட அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சின்னப்பாலமுனை சுகாதார நிலைய வளாகத்தையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் துப்புரவு செய்தனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X