2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சந்தையிலிருந்து பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மீட்பு

Sudharshini   / 2015 ஜனவரி 11 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


எதிர்வரும் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, தம்பிலுவில் பொது சந்தையில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (11) சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, வர்த்தக நிலையங்கள்;, உணவகங்கள் ஆகியவற்றில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில், பிரதேச பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி கே.லோகிதகுமார், பொது சுகாதார பரிசோதகர் கே.சசிதரன் அகியோரினால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போது, மக்களின் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதன்போது, மீன்கள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பெருமளவில் வியாபாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதுடன், அவை அனைத்தும் மண்ணெண்னை உற்றி எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வியாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X