2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சமையல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2015 ஜனவரி 15 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.ஏ.தாஜகான்


பொத்துவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதத்தில் 06 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 360 சமையல் உபகரணங்கள், வியாழக்கிழமை (15) வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முசர்ரத் தலைமையில் நேற்று பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசல் காசீமின் 2014 மாகாண எழுச்சி (பலாத் நெகும) நிதியிலேயே இவ் உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் இணைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.றகீம், பொத்துவில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம்.றிபாஸ், மனித வள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.எம்.ஜகுபர் ஆகியோர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சமையல் உபகரணங்களை வழங்கினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X