2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பியசேன எம்.பியை இணைத்துக் கொள்ள வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஜனவரி 17 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசில் இணைத்துக் கொள்ளக் கூடாது என கோரி ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வெள்ளிக்கிழமை (16) மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

 'மோசடி அரசியல் வாதிகளை நல்லாட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம்' என்ற தொனிப்பொருளிலே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை  அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கோரி, துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன.

இவ் ஆர்ப்பாட்டம் கோளாவில் விநாயகர் வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, 2014-12-22 ஆம் திகதி அரசாங்கத்திடம் வாங்கிய 60 இலட்சம் ரூபாய் எங்கே? மக்கள் நாம் விழித்துக் கொண்டோம், அரசே நீ விழித்துக் கொள், மக்கள் மனதை வென்ற அரசே துரோகிகளை சேர்க்காதே, நல்லாட்சியில் நயவஞ்சகனுக்கு இடமளியாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தி சென்றனர்.

இதேவேளை, மணிகூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டகாரர்களால் பியசேனவின் உருவ பொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், பியசேனவின் வீட்டின் முன்னால் ஒன்றிணைந்து கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பின்னர், தர்மசங்கரி மைதானத்தில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள், பியசேனவை, 'ஜனாதிபதி கட்சியில் இணைத்துக் கொள்ளக்
கூடாது. இது அம்பாறை மாவட்ட மக்களின் உருக்கமான வேண்டுகோள்' என்ற தலைப்பிலான மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக கூறி, மகஜரை வெளியிட்டதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் வீட்டின் முன்பாக பொலிஸ் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பொடியப்பு பியசேன, சுதந்திரக் கட்சிக்கு கட்சி தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X