2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் பலி

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடி எம் - 27ஆம்  பிரதான வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், இன்று சனிக்கிழமை (17) காலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்; 12ஆம்  கொளனியைச் சேர்ந்த 11 பிள்ளைகளின் தந்தையான சம்சுதீன் நூறுமுஹம்மது    (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம், மத்தியமுகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வயல்களுக்கு பாய்ச்சுவதற்காக அளவுக்கதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அவ்வாய்க்காலில் மீன்பிடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இவ்வாறு அளவுக்கதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வாய்க்காலில் குளிப்பதையும் மீன்பிடிக்க முயற்சிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மத்தியமுகாம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ரி.ஏ.டி.எஸ்.செனவிரத்ன பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X